ஈரோடு மாவட்டத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை 11,490 மாணவர்களும், 1,2826 மாணவிகளும் என மொத்தம் 24,316 பேர் தேர்வெழுதினர். இதில் 10,624 மாணவர்களும், 13,062 மாணவிகளும் என 23,686 பேர் வெற்றி பெற்றுள்ளனர். மேலும் 95.23 சதவிகித பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
இதனால் மாவட்ட கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட கல்வி அலுவலர் பாலமுரளி கூறும்போது, மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்து உள்ளனர். இந்த வெற்றிக்கு தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கூட்டு முயற்சியே காரணம் என புகழாரம் சூட்டினார்.
மேலும் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத மாணவர்கள் ஜூன் மாதம் நடைபெறவுள்ள சிறப்பு தேர்வில் மாணவர்கள் பங்கேற்று நல்ல முறையில் தேர்வை எழுதி வெற்றி பெற வேண்டும் என அறிவுறுத்தினார். ஈரோடு மாவட்டம் கடந்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் இடம்பிடித்திருந்த நிலையில், இந்த ஆண்டு சரிந்து இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.