நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தமிழகத்தில் 18ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் மாநிலம் முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் கிராமம் கிராமமாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை என்பதால் மசூதிகளில் இன்று இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள மசூதியில் தொழுகை முடிந்து வெளியே வந்த இஸ்லாமியர்களிடம் அதிமுக வேட்பாளர் மணிமாறன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ராமலிங்கம், தென்னரசு ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இதேபோல மறுபகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் செந்தில்குமாருக்கு ஆதரவு தெரிவித்து எஸ்டிபிஐ கட்சியினரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
ஒரே நேரத்தில் இரு கட்சியை சேர்ந்தவர்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மசூதி முன்பு அதிமுக- அமமுக கட்சியினர் வாக்கு சேகரிப்பு!