ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள மெரினா உணவகத்தில் பிரியாணி சாப்பிடும் போட்டி நடைபெற்றது. பிரியாணி பிரியர்களை கவரும் வகையில் இந்த உணவகத்தின் முகநூலில் போட்டிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. 500க்கும் மேற்பட்டவர்கள் போட்டியில் பங்கேற்க முகநூலில் பதிவு செய்திருந்தனர்.
பரோட்டா சூரி போல் பிரியாணி ராகுல்! 9 நிமிடங்களில் ஒரு கிலோ பிரியாணி! - பிரியாணி போட்டி
ஈரோடு: தனியார் உணவகம் நடத்திய பிரியாணி சாப்பிடும் போட்டியில் வெற்றி பெற்ற முதல் மூன்று நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில் 25 பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். இந்த போட்டியில் பெண்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். ஒரு கிலோ சிக்கன் பிரியாணியை முதலில் சாப்பிட்டு முடிப்பவர்களுக்கு பரிசு என்பதால் இலையில் வைக்கப்பட்ட பிரியாணியை போட்டியாளர்கள் வேக வேகமாக சாப்பிட்டனர்.
இதில் 9 நிமிடங்களில் 1 கிலோ பிரியாணியை முதலில் சாப்பிட்டு பெருந்துறையைச் சேர்ந்த ராகுல் முதல் பரிசை தட்டி சென்றார். 10 நிமிடங்களில் பரணிதரன் என்பவரும் 13 நிமிடங்களில் ஜார்ஜ் என்பவரும் பிரியாணியை சாப்பிட்டு இரண்டு மற்றும் முன்றாவது பரிசுகளை பெற்றனர். முதல் பரிசாக 5 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 3 ஆயிரம் ரூபாயும் மூன்றாவது பரிசாக 2 ஆயிரம் ரூபாய் ரொக்க பணமும், கேடயமும் ஆகியவை வழங்கப்பட்டன.