கர்நாடக எல்லையோரம் அமைந்துள்ள தாளவாடி சுற்று வட்டாரத்தில் 100க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் அமைந்துள்ளன. சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அதிகமாக விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு அருகே தீப்பிழம்பு போல வானிலிருந்து விழுந்த எரிகல்! - தாளவாடி கிராமம்
ஈரோடு: தாளவாடி கிராமத்தில் தீப்பிழம்பு போல வானில் இருந்து விழுந்த எரிகல்லால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இவ்வாறு திகினாரை கிராமத்தில் மலைவாழ்மக்கள் விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்தபோது வானில் இருந்து தீப்பிழம்புபோல ஒளிபாய்ச்சியபடி எரிகல் ஒன்று பாய்ந்து வந்தது. அப்போது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த கிராமமக்கள் பலரின் கண்கள் அதீத ஒளியால் பாதிக்கப்பட்டன.
அப்போது 2 நிமிடம் தொடர்ந்து வனப்பகுதியை நோக்கி வந்த எரிகல் போன்ற ஒளிச்சிதறலை அப்பகுதி மக்கள் படம் பிடித்தனர். இது குறித்து தாளவாடி கிராமமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். எரிகல் விழுந்ததால் விலங்குகள் உயிரிழந்தனவா என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.