ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் நீலகிரி மக்களவை தொகுதிக்குட்பட்ட 294 வாக்குச்சாவடிகளுக்கான இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. அந்த வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் ஆகியவை ஒட்டும் பணி தொடங்கியது.
இந்நிலையில் இன்று சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த நீலகிரி மாவட்ட ஆட்சியரும், நீலகிரி மக்களவை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான இன்னசென்ட் திவ்யா இப்பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தேர்தலின்போது செய்யவேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் விஜயசங்கர் மற்றும் கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கார்த்திக் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஒட்டப்படும் பேப்பர்களில் வேட்பாளரின் பெயருக்கு நேராக சின்னம் உள்ளதா என்பதையும், யாருக்கு வாக்களிக்கிறோம் என்பதை தெரிவிக்கும் விவிபேட் இயந்திரம் முறையாக வேலை செய்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தினார்.
வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்த நீலகிரி மாவட்ட ஆட்சியர்!