தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பகல் நேரங்களில் சாலையைக் கடக்கும் யானைகள்: வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

ஈரோடு: சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பகல் நேரங்களில் யானைகள் சாலையைக் கடப்பதால், வாகன ஓட்டிகள் கவனமாக பயணிக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

elephants

By

Published : Jul 15, 2019, 2:06 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் புலிகள் காப்பகம் உள்ளது. இந்த வனப்பகுதியில் யானை, புலி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தமிழ்நாடு - கர்நாடகாவை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் இந்த அடர்ந்த வனப்பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள வனவிலங்குகள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு பகுதிக்கு இடம் பெயர்வதற்கு தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்வது வழக்கம்.

பகல் நேரங்களில் சாலையைக் கடக்கும் யானைகள்

தற்போது மழையின் அளவு குறைந்துள்ளதால் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர், உணவு தேடி பகல் நேரங்களில் சாலையைக் கடக்கும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இன்று காலை ஒரு யானை தனது குட்டியுடன் சாலையைக் கடந்தும், சாலையோரம் தீவனம் உட்கொண்டும் இருந்தன. இதனைக் கண்ட வாகன ஓட்டிகள் வாகனத்தை நிறுத்தி யானைகள் சாலையைக் கடந்தபிறகு சென்றனர்.

மேலும், சாலை ஓரம் தீவனம் உட்கொள்ளும் யானைகளை தொந்தரவு செய்யக்கூடாது எனவும், புகைப்படம் எடுக்க நினைத்து யானையின் அருகே செல்ல வேண்டாம் எனவும் சத்தியமங்கலம் வனத்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details