ஈரோடு:சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூர் வனச்சரகத்தில் மூலக்கடம்பூர், நடூர், கொளிஞ்சி, மரத்தூர், ஏரியூர் கல்கடம்பூர் பூதிக்காடு, செங்காடு, புலிபோன்காடு ஆகிய வனக்கிராமங்களில் ஒற்றை ஆண் யானை புகுந்து அங்குள்ள வாழை, மக்காச்சோளம், ராகி பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் இன்று செங்காடு மக்காச்சோளக் காட்டுக்கு வந்த ஒற்றையானை அங்கு மேய்ந்து கொண்டிருந்த மாடுகளை தாக்காமல் மின்வேலிக்கு சென்றது. அங்கு கூடியிருந்த மக்கள் யானை திரும்பி போகும் வகையில் சப்தம் போட்டனர். ஆனால் யானை காலை தூக்கி மின்வேலி மீது வைத்து தொட்டு பார்த்தது.