ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பாகத்திற்குள்பட்ட ஆசனூர் வனத்தில் ஏராளமான யானைகள் உள்ளன. அங்கிருக்கும் வனக்குட்டை தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடப்பதால் தற்போது யானைகள் அடிக்கடி ஆசனூர் சாலையைக் கடக்கின்றன.
ஆசனூர் சாலையை வழிமறித்த ஒற்றை யானை: ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு - erode district news in tamil
ஈரோடு மாவட்டம், ஆசனூர் அருகே சாலையில் குறுக்கே சுற்றித் திரிந்த காட்டு யானையால் தமிழ்நாடு கர்நாடக சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆசனூர் சாலையை வழிமறித்த ஒற்றை யானை: 1 மணி நேரம் போக்குவரத்து
சாலையோரம் மூங்கில் மரங்கள் அதிகமாக இருப்பதால், அவற்றை சாப்பிடும் யானைகள் சாலையில் முகாமிடுகின்றன. இந்நிலையில், தீவனம் சாப்பிட வந்த ஒற்றை யானை சாலையோரம் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தது. இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. யானை வனத்திற்குள் சென்றதும் போக்குவரத்து சீரானது.
இதையும் படிங்க:யானைகள் வலசை பாதை மீட்பு: நீதிமன்ற உத்தரவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்!