ஈரோடு வஉசி பூங்கா அருகே தேர்தல் பறக்கும்படை அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற தனியார் போக்குவரத்துக் கழக நிறுவன ஊழியர் சஞ்சீவ் குமார் வைத்திருந்த பையில் மூன்று லட்சம் ரூபாய் இருந்தது தெரியவந்தது.
இருசக்கர வாகனத்தில் சென்றவரிடம் பணம் பறிமுதல்: தேர்தல் பறக்கும்படை அட்டகாசம்
ஈரோடு: வங்கியில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட மூன்று லட்சம் ரூபாய்க்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் அலுவலர்கள் அதனை பறிமுதல் செய்தனர்.
erode
இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையினர் சஞ்சீவ் குமாரிடம் விசரணை நடத்தியதில் வங்கியில் இருந்து பணம் எடுத்துவந்தார் என்பது தெரியவந்தது. ஆனால் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் அலுவலர்கள் மூன்று லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து ஈரோடு மாநகராட்சி தேர்தல் அலுவலர் இளங்கோவிடம் ஒப்படைத்தனர்.