தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதையொட்டி, பண விநியோகத்தை தடுப்பதற்கு தேர்தல் நிலைக்குழு தீவிரமாக ஈடுபட்டுவருகிறது.
இந்நிலையில் நீலகிரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதமிழ்நாடு-கர்நாடக மாநில எல்லையான தாளவாடி அருகே அருள்வாடியில் தேர்தல் நிலைக்குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, கர்நாடக பதிவெண் கொண்ட காரை நிறுத்தி தேர்தல் நிலைக்குழுவினர் சோதனை செய்தனர். அதில் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணம் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து காரில் இருந்தவரிடம் தேர்தல் நிலைக்குழுவினர் விசாரித்தபோது, காரின் உரிமையாளர் சம்பத் கர்நாடக மாநிலம் ஹாசன் கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும், அருள்வாடி பகுதியில் இருந்து தாளவாடி பகுதிக்கு விதை உருளைக் கிழங்கை விற்று அந்த பணத்தை பெற்றுச் செல்வதாக தெரிவித்தார்.
ஆனால் அதற்கான உரிய ஆவணம் இல்லாததால் தேர்தல் நிலைக்குழுவினர் பணத்தை பறிமுதல் செய்தனர்.