தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈரோடு இடைத்தேர்தலுக்கு தடைக்கோரி புகார்.. தேர்தல் ஆணையம் அவசர ஆலோசனை!

ஈரோடு கிழக்கு தொகுதி இத்தேர்தலில் வாக்காளர்களை கவர்வதற்காக அரசியல் கட்சிகள் தொடர்சியாக கொலுசு, சேலை, குக்கர், பணம் போன்றவைகளை வழங்கி வருகின்றன. இது சம்பந்தமாக பெறப்பட்ட புகார்கள் குறித்தும், தேர்தல் ஏற்பாடுகள் குறித்தும் இந்திய தேர்தல் ஆணைய துணை ஆணையர், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபடுகின்றனர்.

Erode East By election
Erode East By election

By

Published : Feb 22, 2023, 3:24 PM IST

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையர் அஜய் பாது ஐஏஎஸ், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி தேர்தல் அதிகாரிகளுடன் மாலை 5 மணிக்கு காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொள்கிறார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சி சார்ந்த வேட்பாளர்களை ஆதரித்து கட்சி நிர்வாகிகள் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். வாக்காளர்களுக்குப் பணம், கொலுசு, பரிசு பொருள் கொடுப்பதாகத் தேர்தல் ஆணையத்திற்குத் தொடர்ச்சியாகப் புகார் வந்துள்ளது. மேலும் இது தொடர்பாக பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவிடம் புகார் மனுவை அளித்துள்ளனர். இது தொடர்பான புகார்கள் இந்திய தேத்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையர் அஜய் பாது ஐஏஎஸ், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு, ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி தேர்தல் அதிகாரிகளுடன் மாலை 5 மணிக்குக் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொள்கிறார். நடைபெறும் கூட்டத்தில், பெறப்பட்ட புகார் குறித்தும், தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், நடத்தை விதிமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அடுத்தடுத்து டார்கெட் செய்யப்படும் நாதக வேட்பாளர்

ABOUT THE AUTHOR

...view details