தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈரோட்டில் ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை! - erode news

DVAC Raid in Erode: ஈரோட்டில் தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் வீடு உள்பட இரண்டு இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

vigilance-police-raided-two-places-including-the-house-of-the-teacher-examination-board-secretary
ஈரோட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 12, 2023, 1:40 PM IST

ஈரோட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

ஈரோடு:தமிழக அரசின் கல்வித்துறை இயக்குநராக இருந்து வந்த ராமேஸ்வரன் முருகன், தற்போது தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளராக உள்ளார். இந்த நிலையில், கடந்த 2012 முதல் 2016ஆம் ஆண்டு வரை அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்பு போலீசாரால் வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கின் பேரில் இன்று (அக்.12) ஈரோடு மாவட்டத்தில் ராமேஸ்வரன் முருகனுக்குச் சொந்தமான இரண்டு இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, ஈரோடு அக்ரஹார வீதியில் உள்ள நகைக்கடை உரிமையாளரும், ராமேஸ்வர முருகனின் மாமனாருமான அறிவுடைநம்பி என்பவர் வீடு உள்ளிட்ட 7க்கும் மேற்பட்ட இடத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.

இதேபோல கோபிசெட்டிப்பாளையம் வெள்ளாங்கோயிலில் உள்ள ராமேஸ்வர முருகனின் வீட்டில் தந்தை சின்ன பழனிச்சாமி செட்டியார் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. காலையில் இருந்து சுமார் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக இந்த லஞ்ச ஒழிப்பு துறை சோதனையானது நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க:சென்னையில் 3,750 போதை மாத்திரைகள் பறிமுதல் - 4 பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details