ஈரோடு:கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரம்பிள்ளை நினைவாக அமைக்கப்பட்ட வ உ சி பூங்கா, ஈரோடு மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது.
வழக்கமாக வ உ சி பூங்காவிற்கு ஈரோடு வாழ்மக்கள் ஆயிரக்கணக்கானோர் வருகை புரிவர். பின்னர் சிறுவர் சிறுமியர் கூட்டாக விளையாடி மகிழ்ச்சியுடன் இரவு வரை பொழுதை கழிப்பார்கள்.
இந்நிலையில் பொங்கல் விடுமுறை தினமான காணும் பொங்கல் தினத்தன்று மக்கள் குடும்பத்துடன் கோயில்கள், சுற்றுலா தலங்கள், சினிமா தியேட்டர், பூங்காக்கள் என குடும்பத்துடன் சென்று பொழுதை கழிப்பது வழக்கம்.
வெறிச்சோடிய வ உ சி பூங்கா ஆனால் தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், நேற்று (ஜன 17) காணும் பொங்கலன்று வ உ சி பூங்கா பொதுமக்கள் இல்லாமல் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது. இது சிறுவர் சிறுமியர் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: முழு ஊரடங்கு: காணும் பொங்கலன்று வெறிச்சோடிய சுற்றுலாத்தலம்