ஈரோடு:சத்தியமங்கலம் அடுத்த உக்கரம் மில்மேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 300 மாணவ, மாணவியர்கள் படித்து வருகினறனர். இப்பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாததால் மாணவ, மாணவர்கள் பாதுகாப்பு கருதி ரூ.46 வட்சம் மதிப்பில் 630 மீட்டர் சுவர் அமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பள்ளியில் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. மீதமுள்ள சுற்றுச்சுவரும் தரமின்றி இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். வேகாத செங்கல், குறைந்த சிமெண்ட் உடன் கலவையை என்று தரமற்ற முறையில் வேலைகள் நடப்பதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.