தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கனமழையால் உடைந்த ஏரி; சாலையில் நீந்திய வாகனங்கள்..! - Due to heavy rain

ஈரோடு அருகே கரட்டுப்பள்ளம் பகுதியில் பழமையான கீழ்பவானி கால்வாயின் கசிவு நீர் ஏரி கன மழையின் காரணமாக உடைந்ததால் சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடியது

கனமழையால் உடைந்த ஏரி
கனமழையால் உடைந்த ஏரி

By

Published : Oct 21, 2022, 4:54 PM IST

ஈரோடு அடுத்துள்ள தொட்டிபாளையம் பகுதியில் கரட்டுப்பள்ளம் பகுதியில் 40 ஆண்டுகள் பழமையான ஏரி உள்ளது. கீழ்பவானி பிரதான கால்வாயில் இருந்து வரும் கசிவு நீரை ஆதாரமாக கொண்டு இருக்கும் இந்த ஏரி, நேற்று இரவு பெய்த கன மழையின் காரணமாக ஏரியின் ஓரு பகுதி முற்றிலுமாக உடைந்தது.

இதன் காரணமாக ஏரியின் நீர் முற்றிலுமாக வெளியேறி கரட்டுபள்ளம், கள்ளியங்காட்டு வலசு, கெங்கம்பாலி, நல்லியம்பாளையம், காசிபாளையம் பகுதியின் வழியாக உள்ள நீர் வழி தடங்கள் வழியாக சென்றது.

ஏரியின் நீர் சாலையில் பெருக்கெடுத்து சென்றதால் தேங்கிய நீரில் வாகனங்கள் நீந்தியபடி சென்றது.

கனமழையால் உடைந்த ஏரி

இதையும் படிங்க: புஞ்சைபுளியம்பட்டி மாட்டுச் சந்தையில் ரூ.2 கோடிக்கும் மேல் கால்நடை விற்பனை

ABOUT THE AUTHOR

...view details