தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெளியே வந்த தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள்: தோப்புக்கரணம் போட வைத்த டிஎஸ்பி! - police officer gave punishment

ஈரோடு: அநாவசியமாக வெளியே சுற்றித்திரிந்த தனிமைப்படுத்தப்பட்ட நபர்களைக் கண்டித்து, தோப்புக்கரணம் போட சத்தியமங்கலம் டிஎஸ்பி உத்தரவிட்டார்.

அச்சமின்றி வெளியே உலாவிய தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள்: தோப்புகரணம் போட உத்தரவிட்ட டிஎஸ்பி!
அச்சமின்றி வெளியே உலாவிய தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள்: தோப்புகரணம் போட உத்தரவிட்ட டிஎஸ்பி!

By

Published : Apr 9, 2020, 12:36 PM IST

சமய மாநாட்டுக்கு சென்று சத்தியமங்கலம் திரும்பிய 3 பேரை சுகாதாரத் துறையினர் பெருந்துறை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று தனிமைப்படுத்தினர். இதையடுத்து, இவர்கள் வசித்த குடியிருப்பைச் சுற்றியுள்ள 1,892 வீடுகளில் 6 ஆயிரத்து 100 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களை காவல் துறையினர் கண்காணித்துவருகின்றனர்.

இந்நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட நபர் என்ற சீல் வைக்கப்பட்ட இருவர், அங்கிருந்து வெளியேறி சுற்றித் திரிந்தனர். இதனிடையே, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் தலைமையில் புதிய பாலம் அருகே வாகனத் தணிக்கையில் காவல் துறையினர் ஈடுபட்டிருந்தனர்.

அச்சமின்றி வெளியே உலாவிய தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள்: தோப்புகரணம் போட உத்தரவிட்ட டிஎஸ்பி!

அப்போது, தனிமைப்படுத்தப்பட்ட என்று அடையாளம் காணப்பட்ட இரண்டு இளைஞர்களையும் டிஎஸ்பி சுப்பையா, அழைத்துச்சென்று தோப்புக்கரணம் போடவைத்து, தண்டனை வழங்கினார். 'இனிமேல் வெளியே வரமாட்டேன்' என கூறியபடி இளைஞர்கள் தோப்புக்கரணம் போட்டனர்.

இதையும் படிங்க:தனிமைப்படுத்தப்பட்டவர் வெளியே வந்ததால் கரோனா வார்டில் அனுமதி!

ABOUT THE AUTHOR

...view details