தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுமியை மூன்றாவது திருமணம் செய்த போர்வெல் ஓட்டுநர் போக்சோவில் கைது - போக்சோ

ஈரோடு: நம்பியூர் அருகே பள்ளி மாணவியை மூன்றாவது திருமணம் செய்த போர்வெல் ஓட்டுநரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

போர்வெல் ஓட்டுநர்
போர்வெல் ஓட்டுநர்

By

Published : Sep 8, 2021, 10:13 AM IST

ஈரோடு மாவட்டம் நம்பியூர் காவல் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாறன் என்பவர் தனது 15 வயது மகளைக் காணவில்லை எனப் புகார் அளித்தார். அப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், காணாமல் போன சிறுமியைத் தேடி வந்தனர்.

அப்போது சிறுமி, போர்வெல் ஓட்டுநர் ரவியுடன் கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள குருமந்தூர் பகுதியில் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திறக்கு சென்ற காவல் துறையினர், இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், ரவி தனது வீட்டின் அடுத்த தெருவில் உள்ள சிறுமியைச் சந்தித்து ஆசை வார்த்தை கூறியதாகவும், போன் மூலம் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசி, திருமணம் செய்துகொண்டது தெரியவந்தது.

மேலும், இவருக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி, இரண்டு மகன்கள் இருக்கின்றனர். முதல் மனைவி வசந்தாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இரண்டாவதாகப் பிரியா என்பவரைத் திருமணம் செய்து வாழ்ந்து வந்தார் என்பதும் விசாரணை மூலம் தெரிய வந்தது.

தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர், ரவியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details