ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடியில் இருந்து கோடிபுரத்துக்கு தலமலை வழியாக அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. கோடிபுரத்தில் அந்த பேருந்தை ஓட்டியவரான தங்கராஜுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பேருந்தை சாலையோரம் சற்று ஓரமாக நிறுத்தி பயணிகள் 15 பேரையும் தங்கராஜ் கீழே இறக்கிவிட்டுள்ளார்.
சாதூர்யமாக செயல்பட்ட ஓட்டுநர்; பலர் உயிர் தப்பினர் - செயல்பட்ட
ஈரோடு: சத்தியமங்கலம் அருகே மாரடைப்பு ஏற்பட்ட பேருந்து ஓட்டுநர் சாதூர்யமாக செயல்பட்டு பயணிகளின் உயிரை காப்பாற்றிய சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
பேருந்து
இதனைத் தொடர்ந்து நடத்துநர் செல்வம், அவ்வழியாக சென்ற காரில் ஓட்டுநர் தங்கராஜை ஏற்றிக்கொண்டு தாளவாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். அங்கு அவரை பரிசோதித்தபோது மாரடைப்பு ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல்நலக்குறைவு ஏற்பட்டபோது பயணிகளை பாதுகாப்பாக இறக்கிவிட்ட ஓட்டுநரை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.