ஈரோடு மின்வாரிய அலுவலகம் எதிரே உள்ள தனியார் பழமுதிர் நிலையத்தில் நேபாளத்தைச் சேர்ந்த ராம் நிக்பால் என்பவர் பணியற்றிவந்தார். அவருக்கும் சக ஊழியர்களுக்கும் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனால் மனமுடைந்த அவர், பழமுதிர் நிலையத்தின் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
சக ஊழியர்களுடன் தகராறு: வட மாநில இளைஞர் தற்கொலை - வட மாநில இளைஞர் தற்கொலை
ஈரோடு: தனியார் பழமுதிர் நிலையம் ஒன்றில் சக ஊழியர்களுடன் ஏற்பட்ட தகராறில் வட மாநில இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். அதன் சிசிடிவி பதிவு வெளியாக வைரலாகிவருகிறது.
-suicide-in-erode
அதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதன்பின் அவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரித்துவரும் நிலையில், அவர் தற்கொலை செய்துகொண்ட காட்சி அருகிலுள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அப்பதிவு தற்போது வெளியாகி வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க:அர்ச்சகர் தற்கொலை வழக்கு: உயர் அலுவலர்களை வழக்கில் சேர்க்கக் கோரிய மனு தள்ளுபடி!