ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பவளக்குட்டையைச் சேர்ந்தவர் சின்னமுத்தான். இவருக்கு 19 வயதில் விஜயா என்ற பெண் உள்ளார். வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியான விஜயா, நேற்று மாலை பவளக்குட்டையில் இருந்து கடம்பூர் பேருந்து நிலையத்துக்கு தனியே நடந்து சென்றுள்ளார். இந்நிலையில், பேருந்து நிலையத்திற்கு சென்ற வழியில் விஜயா திடீரென்று மாயாமாகியுள்ளார்.
சத்தி அருகே மாற்றுத்திறனாளி பெண் திடீர் மாயம்! - மாயம்
ஈரோடு: சத்தியமங்கலம் அருகே பவளகுட்டையில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் தீடீரென்று மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

missing
பெற்றோர் மற்றும் உறவினர்கள், விஜயாவினை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்துள்ளனர். ஆனால் அவரை பற்றிய விபரம் ஏதும் கிடைக்காததால் விஜயாவின் தந்தை சின்னமுத்தான் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். விஜயாவை யாரேனும் கடத்தி சென்றார்களா அல்லது அவரே வழி தவறி எங்கேனும் சென்று விட்டாரா என்று கடம்பூர் காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.