தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோட்டை மாரியம்மன் கோயிலில் தீமிதித்து நேர்த்திக்கடனைத் தீர்த்த பக்தர்கள் - அபிஷேக ஆராதனை

ஈரோடு: பிரசித்திப்பெற்ற கோட்டை மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழாவில் பக்தர்கள் கலந்துகொண்டு தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனைத் தீர்த்தனர்.

தீ மிதித்து நேர்த்தி கடனை தீர்த்த பக்தர்கள்
தீ மிதித்து நேர்த்தி கடனை தீர்த்த பக்தர்கள்

By

Published : Jan 31, 2020, 1:52 PM IST

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கோட்டை மாரியம்மன் ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தை மாதத்தில் தீமிதி திருவிழா நடைபெறும்.

அந்தவகையில் இந்த ஆண்டிற்கான தீமிதி திருவிழா கடந்த 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழாவில் பக்தர்கள் அனைவரும் காப்பு கட்டி விரதமிருந்தனர்.

இந்நிலையில் இன்று காலை கோட்டை மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருமுழுக்கு வழிபாடு செய்யப்பட்டது.

தீமிதித்து நேர்த்திக்கடனைத் தீர்த்த பக்தர்கள்

பின்னர் கோயில் பூசாரி தீமிதித்து திருவிழாவினை தொடங்கிவைத்தார். இதனையடுத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனைத் தீர்த்துக் கொண்டனர்.

இதையும் படிங்க :வட்டி தொழில் நடத்தினாரா சூப்பர் ஸ்டார்?

ABOUT THE AUTHOR

...view details