தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 18, 2019, 9:14 AM IST

ETV Bharat / state

ஈரோட்டில் 20 பேருக்கு டெங்கு பாதிப்பு - கண்காணிப்பு அலுவலர் தகவல்

ஈரோடு: டெங்கு காய்ச்சல் பாதித்து 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கண்காணிப்பு அலுவலர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

ண்காணிப்பு அலுவலர் பாலசந்திரன்

இதுகுறித்து அவர் கூறியதாவது, ‘தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவிவரும் நிலையில், ஈரோட்டில் 20 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 86 பேர் மாவட்டம் முழுவதும் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளனர்.

கண்காணிப்பு அலுவலர் பாலசந்திரன்பேட்டி

மேலும், டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதபோல் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் டெங்கு தடுப்பு பணிகளுக்காக 1,200 சுகாதார பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்’ என்றார்.

இதையும் படிங்க: டெங்குவிற்கு 4 வயது சிறுமி உயிரிழப்பு: பள்ளி நிர்வாகத்திற்கு 1 லட்சம் அபராதம்

ABOUT THE AUTHOR

...view details