கரோனா வைரஸின் இரண்டாவது அலை தமிழ்நாட்டில் தற்போது தீவிரமாக பரவ ஆரம்பித்திருக்கிறது. இதனால், தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இதற்கிடையே, சுப நிகழ்ச்சிகளில் ஒலி ஒளி அமைப்புக்கள் போன்ற தொழிலை சார்ந்து தமிழகத்தில் 10 லட்சத்திற்கு மேற்பட்ட மேடை பந்தல், மேடை அலங்காரம் சார்ந்த தொழில் செய்யும் தொழிலாளர்கள், நேரடியாகவும் மறைமுகமாகவும் பயனடைந்து வருகின்றனர்.
சுப நிகழ்ச்சியில் 50% மக்களை அனுமதிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ஈரோடு: 50% மக்களுடன் திருமண சுபகாரியங்களை நடத்திட அனுமதிக்கக் கோரி மேடை அலங்காரம், மணவறை அலங்காரம் சங்கங்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் தாங்கள் மிகவும் பாதிக்கப்படுவதாகவும் தங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் கட்டுப்பாடுகளை தளர்த்தி கரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் மண்டபத்திற்கு ஏற்ப 50 சதவீதம் மக்களை அனுமதிக்க வலியுறுத்தி 100க்கும் மேற்பட்டவர்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஹையர் குட்ஸ் ஓனர்ஸ் அசோசியேசன் ஈரோடு மாவட்ட தலைவர் சரவணன், மாவட்டச்செயலாளர் அமலநாதன், திருவருள் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.