ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள பவானிசாகர் நால்ரோடு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பழனிசாமி. இவரது தோட்டத்தில் 20 அடி அளவில் தண்ணீர் தொட்டி உள்ளது. இவர் இன்று காலை தனது விவசாய தோட்டத்தில் உள்ள தண்ணீர் தொட்டி பகுதிக்கு சென்றபோது தொட்டியில் புள்ளிமான் ஒன்று தவறி விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்ததைக் கண்டார்.
தண்ணீரில் தத்தளித்த புள்ளிமானை மீட்ட விவசாயிகள்...! - சத்யமங்கலம் செய்திகள்
ஈரோடு: சத்தியமங்கலம் அருகே வனப்பகுதியிலிருந்து வழி தவறி வந்த புள்ளிமான் தண்ணீர் தொட்டியில் விழுந்து தத்தளித்துள்ளது. இதைக் கண்ட விவசாயிகள் மானை மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.
deer rescue in sathyamangalam
இதுகுறித்து உடனடியாக சுற்றுவட்டாரத்தில் உள்ள விவசாயிகளுக்கு பழனிசாமி தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த விவசாயிகள் தொட்டியில் இறங்கி தத்தளித்த புள்ளிமானை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து, விளாமுண்டி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் அறிவுரையின் பேரில் புள்ளிமானை அருகில் உள்ள சீரங்கராயன் வனப்பகுதியில் விட்டனர்.