தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மிதமிஞ்சிய போதையில் சாக்கடையில் விழுந்த இளைஞர் உயிரிழப்பு! - Erode district news

ஈரோடு: மிதமிஞ்சிய மதுபோதையில் மாநகராட்சி முன்னாள் தூய்மைப் பணியாளர் சாக்கடைக் கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Death of a youth who fell into the sewer due to excessive intoxication
Death of a youth who fell into the sewer due to excessive intoxication

By

Published : Oct 4, 2020, 7:10 AM IST

ஈரோடு மரப்பாலம் அருகேயுள்ள புதுமைக்காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. திருமணமாகி மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வாழ்ந்துவந்தார். இவர் மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளராகப் பணியாற்றிவந்தார்.

அங்கு பணிக்குச் சரியாகச் செல்லாத காரணத்தால் வேலையைவிட்டு நீக்கியுள்ளனர். இதனால் கடந்த சில மாதங்களாக கிடைத்த வேலையைச் செய்து அதில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு வாழ்ந்துவந்தார். மேலும் மதுப்பழக்கத்திற்கு அடிமையான ராமசாமி அதிக பணமிருந்தால் வேலைக்குச் செல்லாமல் தொடர்ந்து 24 மணி நேரமும் மது குடித்துக்கொண்டே இருந்துள்ளார். இந்த நிலையில் இந்த வாரத்தில் செய்த பணிக்காக நேற்று (அக். 03) அவருக்குப் பணம் கிடைத்துள்ளது.

இப்பணத்தைக் கொண்டு வழக்கத்தைவிட அதிகளவில் மது அருந்திய ராமசாமி நடக்கக்கூட முடியாமல் சூரம்பட்டி நான்கு சாலை பிரதான சாலையில் அமைந்துள்ள சாக்கடைக் கால்வாயில் தவறி விழுந்துள்ளார்.

இதில் தலையில் பலத்த காயமடைந்ததால் மயக்கமடைந்து இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அப்படியே கிடந்துள்ளார். இதனைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் சூரம்பட்டி காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில் விரைந்துவந்த காவல் துறையினர் சாக்கடைக் கால்வாயில் கிடந்தவரைப் பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து, சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதையும் படிங்க: நக்சலைட் ஊடுருவலா? கேரள எல்லையில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள்!

ABOUT THE AUTHOR

...view details