ஈரோடு:சூரம்பட்டி நால்ரோடு அருகில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்தியா சந்திரயான் 3 வெற்றிகரமாக விண்ணில் செலுத்த பணிகள் மேற்கொண்ட அனைத்து விஞ்ஞானிகளுக்குத் தனது வாழ்த்துகளை.
பின் சர்வதேச கச்சா எண்ணெய் விலை குறைந்த போதிலும் பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், ஆண்டுக்கு 2 கோடி பேர் என 10 ஆண்டுகளில் 20 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கவில்லை என்றும், ஊழல் குறித்துப் பேசும் பிரதமர் நரேந்திர மோடி ஊழல் தொடர்பாகப் பேசுவதற்கு முன்பு தான் தகுதியானவரா என்று உணர வேண்டும் என்று சாட்டினார்.
மேலும் மத்திய அரசின் மக்கள் விரோத போக்கைக் கண்டித்து வரும் செப்டம்பர் மாதம் 12,13,14 ஆகிய தேதிகளில், சிபிஐ கட்சியின் தலைமையில் தொடர் மறியல் போராட்டம் தமிழகம் முழுவதும் முன்னெடுக்க உள்ளதாகத் தெரிவித்தார். தமிழக ஆளுநர், போட்டி அரசாங்கம் செய்து வருவதாகவும், பாஜக ஆர்எஸ்எஸ் தொண்டராகச் செயல்படுவதாகவும் குடியரசுத் தலைவரிடம் முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறினார்.
மேலும் ஆளுநரின் நடவடிக்கைகளை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் தொடர்ந்து பல போராட்டங்கள் நடத்திவருவதாகவும், கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தியதையும் அதில் பலர் கைதானதைக் குறித்தும் பேசிய முத்தரசன். தமிழ மக்கள் அனைவருமே ஆளுநரின் அராஜகத்தை எதிர்த்துப் போராடக்கூடிய நிலை ஏற்படும் என்று தெரிவித்தார்.