தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசுப் பேருந்து நடத்துனர்கள் 3 பேருக்கு கரோனா: சக ஊழியர்கள் அச்சம்!

ஈரோடு: சத்தியமங்கலத்தில் அரசு பேருந்து நடத்துனர்கள் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து சக ஓட்டுநர்கள், பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.

அரசு பேருந்து நடத்துநர்கள் 3 பேருக்கு கரோனா
அரசு பேருந்து நடத்துநர்கள் 3 பேருக்கு கரோனா

By

Published : Apr 23, 2021, 1:26 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து 96 அரசு பேருந்துகள் ஈரோடு, கோவை, திருப்பூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும், கர்நாடக மாநிலம் மைசூர், பெங்களூர் உள்ளிட்ட வெளிமாநில நகரங்களுக்கும் இயக்கப்பட்டு வருகின்றன.

தற்போது, தமிழ்நாட்டில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் பேருந்துகளில் இருக்கைகளில் அமர்ந்து மட்டுமே பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காய்ச்சல் அறிகுறி தென்பட்ட சத்தியமங்கலம் அரசுப் போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் நடத்துனர்கள் மூன்று பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக உடன் பணிபுரிந்த சக ஓட்டுநர்கள், பேருந்தில் பயணம் செய்த பயணிகள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். போக்குவரத்துக் கழக உயர் அலுவலர்களின் ஆலோசனையின் பேரில் சத்தியமங்கலம் அரசுப் போக்குவரத்து கழக பணிமனையில் உள்ள ஓட்டுநர்கள், நடத்துனர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து கழக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:இரண்டு மணி நேரத்தில் ஆக்சிஜன் வராவிட்டால் 60 பேர் உயிர் கேள்விக்குறி!

ABOUT THE AUTHOR

...view details