ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுக்காவில் உள்ள உக்கரம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் ராஜேஸ்வரி. இவர் உக்கரம் பகுதியில் உள்ள பொதுமக்கள், விவசாயிகளிடம் சான்று வழங்க லஞ்சம் பெறுவதாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில் உக்கரம் பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கிராம நிர்வாக அலுவலரைக் கண்டித்து உக்கரம் கிராமத்தில் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர்.
அதில் 'உக்கரம் கிராம நிர்வாக அலுவலகத்தில் மக்கள் சேவை என்ற பெயரில் மக்களிடம் அநியாயமாக கொள்ளை அடிக்காதே', 'ஒவ்வொரு சான்றுக்கும் ஒவ்வொரு கட்டணம். பட்டா, சிட்டாவுக்கு ரூ. 500, பட்டா மாறுதலுக்கு ரூ.5500 முதல் ரூ.70 ஆயிரம்', 'இறந்தவர்களைக் கூட விட்டு வைப்பதில்லை, இறப்புச்சான்றுக்கு ரூ.1000', 'இவர்களுக்கு அலுவலக நேரமே கிடையாது' போன்ற வாசகங்கள் பேனரில் இடம் பெற்றிருந்தன.