ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ், நந்தகுமார் ஆகிய இருவரும் சேர்ந்து வீரப்பன் சத்திரத்தில் A.K டெக்ஸ்டைல்ஸ் என்ற ஆடை உற்பத்தி நிறுவனத்தை நடத்திவருகின்றனர். இவர்களிடம் ஈரோடு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் கோட்டை பா.ராமு, அவரது நண்பர் ஆனந்த் ஆகிய இருவரும் தவணை முறையில் ஆடைகளை வாங்கிவந்துள்ளனர்.
ரூ.13 லட்சம் மோசடி-திமுக நிர்வாகி மீது புகார் - புகார்
ஈரோடு: டெக்ஸ்டைல்ஸ் தொழிலில் கொடுக்க வேண்டிய ரூ.13 லட்சத்தை தராமல் மோசடி செய்ததாக திமுக நிர்வாகி மீது பாதிக்கப்பட்டவர்கள் ஈரோடு காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
முதல் தவணை தொகையை மட்டும் அளித்துள்ள நிலையில், அவர்கள் மீதமுள்ள ரூ.13 லட்சம் மதிப்புள்ள தவணை தொகையை அளிக்காமல் இருந்துள்ளனர். எனவே ராமுவின் வீட்டிற்கு சென்று கடனை கேட்ட கோவிந்தராஜூக்கு ராமுவும் அவரது நண்பர்களும் சேர்ந்து கொலைமிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனால் பணத்தை திரும்ப கேட்டால் கொலைமிரட்டல் விடுக்கின்றனர். எனவே ராமு மற்றும் அவரது நண்பர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோவிந்தராஜ், நந்தகுமார் ஆகிய இருவரும் ஈரோடு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.