ஈரோடு:பெருந்துறை அருகே சரளையில் நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு திட்டப்பணிகளைத்தொடங்கி வைத்தார். புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் மற்றும் 63,858 நபர்களுக்குப் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதன் மொத்த மதிப்பீடு 612.77 கோடி ரூபாய். முன்னதாக அவர் பெருந்துறை கிரே நகர் பகுதியில் நடைபெற்று வரும் அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணிகளைப்பார்வையிட்டார். பின்னர் விழாவில் அவர் பேசுகையில், ”ஈரோடு ரிங்ரோடு திட்டத்தை விரிவாக்க ஆய்வு அறிக்கை உருவாக்க 60 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படும்.
வேளாண் மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் 16.82 கோடி ரூபாயில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும். தாளவாடி நல்லம்பட்டி மற்றும் ஈரோட்டில் வேளாண் பொருட்களைப் பாதுகாக்க குளிர்பதனக்கிடங்குகள் உருவாக்கப்படும். மஞ்சள் ஏற்றுமதி முனையம் 10 கோடி ரூபாய் செலவில் விரிவாக்கப்படும். தாளவாடி ஆரம்ப சுகாதார நிலையம் எக்ஸ்ரே வசதியுடன் 25 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.
மாநிலத்தில் சாதனைப்படைத்த நெல் உற்பத்தியும், அனைத்து சாதியினரையும் கோயில்களில் அர்ச்சகர்களாக மாற்றும் அரசு சட்டத்தை நிலைநாட்டி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு திமுக அரசின் மாபெரும் சாதனைகள்’’ என அவர் குறிப்பிட்டார்.