ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பிரசித்தி பெற்ற பச்சமலை பாலமுருகன் கோயில், பவளமலை தண்டாயுதபாணி சுவாமி கோயில் என இரு முருகன் கோயில்கள் உள்ளன. இக்கோயில்களில் பங்குனி உத்தரம், சஷ்டி விழா, தைப்பூச விழாக்கள் வெகுவிமர்சியாக கொண்டாடப்பட்டுவருகிறது.
இந்நிலையில் இன்று தைப்பூச விழாவையொட்டி இரு கோயில்களிலும் விழா பூஜைகள், அலங்காரம் உள்ளிட்டவை நடைபெற்றது. மேலும் மாலை தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதனடிப்படையில் பச்சமலை பாலமுருகன் கோயிலில் நடைபெற்ற தைப்பூச விழாவில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பங்கேற்றார்.
அமைச்சருக்கு கோயில் அச்சகர்கள் சார்பில் பூர்ணகும்ப மரியாதை அளிக்கப்பட்டு, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பச்சமலை அடிவாரத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் விழாவை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கிவைத்து, பக்தர்களுக்கு உணவு பரிமாறினார்.
தைப்பூச விழாவுக்கு பொதுவிடுமுறை குறித்து முதலமைச்சர் முடிவெடிப்பார் அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், “ஆன்மீகத்தை பொருத்தவரையிலும் எம்மதமும் சம்மதம், என்ற அடிப்படையில் திராவிட கட்சிகள் கடைபிடித்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக தைப்பூச விழாவில் இன்று பக்தர்களுக்கு அன்னதானம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் தைப்பூச விழாவிற்கு பொதுவிடுமுறை அளிப்பது குறித்து முதலமைச்சர்தான் முடிவெடுப்பார். அதற்குறிய கோப்புகள் அவரிடம் வழங்கப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 180 டன் எடை: ஒரே கல்லால் ஆன முருகன் சிலை