ஈரோடு மாவட்டத்தில் செயின், செல்போன் பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. குறிப்பாக மொடக்குறிச்சி, பெருந்துறை, ஈரோடு மாநகரில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் நேற்றிரவு (ஜூன் 24) ஈரோடு மாநகரில் 2 பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவம் நடந்துள்ளது.
பகீர் வீடியோ... கண்ணிமைக்கும் நேரத்தில் செயின் பறிப்பு... - போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்
ஈரோட்டில் ஒரே இரவில் இரண்டு பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவம் நடந்தேறியுள்ளது.
ஈரோட்டில் அதிகரித்து வரும் செயின் பறிப்பு சம்பவங்கள்…ஒரே இரவில் 2 பெண்களிடம் செயின் பறிப்பு!!
அந்த வகையில் ஈரோடு டீச்சர்ஸ் காலனியில் ஒரு சம்பவம், சூளையில் ஒரு சம்பவம் நிகழந்துள்ளது. இந்த இரண்டு சம்பவங்களும் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்துள்ளது. இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஈரோட்டில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி