ஈரோடு மாவட்டம் தாளவாடி சுற்றுவட்டார கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு பிஎஸ்என்எல் தொலைபேசி சேவை வழங்கப்படுகிறது. திருச்சி, சேலம், பெங்களூரு, சாம்ராஜ்நகர் வழியாக கண்ணாடி இழை கேபிள் மூலம் தாளவாடியில் உள்ள செல்போன் கோபுரத்துக்கு இணைப்பு வழங்கப்படுகிறது. இந்நிலையில், கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் அருகே சாலை பதிப்பிக்கும் பணி நடைபெற்று வருவதால், பிஸ்என்எல் கேபிள் துண்டிக்கப்பட்டு தொலைபேசி சேவை பாதிக்கப்பட்டது.
பிஎஸ்என்எல் சேவை முடக்கம்; தாளவாடி மக்கள் பாதிப்பு! - no internet
ஈரோடு: தாளவாடி மலைப்பகுதியில் பிஎஸ்என்எல் கேபிள் துண்டிக்கப்பட்டதால் தொலைபேசி, இணையதள சேவை கிடைக்காமல் வாடிக்கையாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
பிஎஸ்என்எல் சேவை பாதிப்பு
இதனால், அப்பகுதியில் வசிக்கும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொலைபேசி, இணையதள சேவை கிடைக்காமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். பிஎஸ்என்எல் கேபிள் துண்டிக்கப்பட்டு இரண்டு நாட்களாகியும் சரிசெய்யப்படாததால் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.