ஈரோடு மாவட்டம் குடியாத்தம் கே.வி.குப்பம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும்படையினர் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேலூரிலிருந்து அந்த வழியாக குடியாத்தம் நோக்கி வந்த வங்கி ஏஜென்சி வேன் ஒன்றை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ரூ.1.42 கோடி பணம் இருந்தது தெரியவந்தது.
வாகன சோதனையில் சிக்கிய பணத்தை திருப்பி ஒப்படைத்த பறக்கும் படை அதிகாரிகள்! - பறக்கும் படை அதிகாரிகள்
ஈரோடு:வாகன சோதனையின்போது, பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1.42 கோடி பணத்தை, உரிய ஆவணங்கள் சமர்ப்பித்ததையடுத்து சம்பந்தப்பட்டவர்களிடம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் திரும்ப ஒப்படைத்தனர்.
வாகனத்தணிக்கையில் சிக்கிய பணத்தை திருப்பி ஒப்படைத்த பறக்கும் படை அதிகாரிகள்!
உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தையும் வாகனத்தையும் தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு வங்கி ஏஜென்சி சார்பில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளிடம் உரிய ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டது. இதையடுத்து தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தையும், பணத்தையும் வங்கி ஏஜென்சியிடம் திரும்ப ஒப்படைத்தனர்.