தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ.2 கோடி பணத்துடன் கடத்தப்பட்ட காரை சாலையோரம் விட்டு சென்ற கொள்ளையர்கள் - கார் கடத்தல்

ஈரோட்டில் ரூ.2 கோடி பணத்துடன் கடத்தப்பட்ட காரை கொள்ளையர்கள் சாலையோரம் விட்டுச்சென்றுள்ளனர்.

2 கோடி ரூபாயுடன் கார் கடத்தல்; காரில் பணம் எடுத்து வந்த காரணம் என்ன..! போலீஸ் விசாரணை
2 கோடி ரூபாயுடன் கார் கடத்தல்; காரில் பணம் எடுத்து வந்த காரணம் என்ன..! போலீஸ் விசாரணை

By

Published : Jan 21, 2023, 5:58 PM IST

கடத்தப்பட்ட கார்

ஈரோடு: ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியைச் சேர்ந்த விகாஷ் என்பவர் காரில் கோயம்புத்தூருக்கு வந்துள்ளார். இன்று (ஜனவரி 21) அதிகாலை சுமார் 4 மணி அளவில் ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள இலட்சுமி நகர் பகுதியில் அவர் காரில் வந்துகொண்டிருந்த போது ஐந்து பேர் கொண்ட கும்பல் விகாஷின் காரை வழிமறித்து, காரில் இருந்த விகாஷை இறக்கி விட்டுவிட்டு காரை கடத்திச் சென்றுள்ளது.

இதுகுறித்து விகாஷ் சித்தோடு போலீசாரிடம் புகார் அளித்தார். அதோடு காரில் சுமார் 2 கோடி ரூபாய் பணம் இருந்ததாக கூறினார். இதுகுறித்து தீவிர விசாரணையை தொடர்ந்து வந்த நிலையில், கடத்தப்பட்ட காரை டெக்ஸ்வேலி ஜவுளி சந்தை அருகே மீட்டுள்ளனர்.

காரில் எதற்காக 2 கோடி ரூபாய் பணம் எடுத்து வரப்பட்டது. காரை கடத்தி வந்தவர்களுக்கும் விகாஷூக்கும் என்ன விரோதம் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு தொகுதியில் இளைய மகன் போட்டியா.? ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் விளக்கம்..

ABOUT THE AUTHOR

...view details