தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மலைப்பாதையில் சிக்கிய பேருந்து: ஓட்டுநர் சாமர்த்தியத்தால் தப்பித்த பயணிகள்..! - கொண்டைஊசி வளைவு

ஈரோடு: திம்பம் மலைப்பாதையில் கட்டுபாட்டை இழந்து சிக்கிய தனியார் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் ஒட்டுநரின் சாமர்த்தியத்தால் அதிஷ்டவசமாக உயிர்தப்பினர்.

பஸ்

By

Published : Aug 7, 2019, 3:39 AM IST

சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலை 27 கொண்டைஊசி வளைவுகளுடன் கூடிய மலைப்பாதையில் செல்கிறது. இம்மலைப்பாதை வழியாக தான் தமிழ்நாடு - கர்நாடக மாநிலங்களுக்கிடையே பேருந்து மற்றும் சரக்குப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மைசூருவிலிருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி கொண்டு தனியார் பேருந்து ஈரோடு செல்வதற்காக திம்பம் மலைப்பாதை வழியாக வந்துக் கொண்டிருந்தது.

மலைப்பாதையில் சிக்கிய பேருந்து

இந்த பேருந்து 9ஆவது கொண்டைஊசி வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்புச்சுவரில் மோதியது. ஓட்டுநர் உடனடியாக பேருந்து பள்ளத்தாக்கில் விழாமலிருக்க அதன் சக்கரங்களுக்கு இடையே கற்களை வைத்து தடுப்பு அமைத்து பேருந்து நகராமல் நிறுத்தினார். ஓட்டுநரின் இந்த சாமார்த்தியமான செயலால் பயணிகள் அனைவரும் உயிர்தப்பினர். பின்னர், அவ்வழியே வந்த வாகன ஓட்டிகள், பயணிகள் ஆகியோர் உதவியுடன் பேருந்து பின்னால் நகர்த்தப்பட்டு மீட்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details