தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காணும் பொங்கல் விழா: பவானிசாகர் பூங்கா முன்பு குவிந்த சுற்றுலாப் பயணிகள் - erode district news

ஈரோடு: காணும் பொங்கல் விழாவான இன்று (ஜன.17) சுற்றுலாப் பயணிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பவானிசாகர் பூங்கா முன்பு குவிந்தனர்.

பவானிசாகர் பூங்கா முன்பு குவிந்த சுற்றுலாப் பயணிகள்
பவானிசாகர் பூங்கா முன்பு குவிந்த சுற்றுலாப் பயணிகள்

By

Published : Jan 17, 2021, 2:23 PM IST

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் முன்பகுதியில் 15 ஏக்கர் பரப்பளவில் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவிற்கு ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

பவானிசாகர் பூங்கா முன்பு குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கரோனா தொற்று காரணமாக ஜனவரி 15, 16, 17 ஆகிய தேதிகளில் பூங்காவிற்கு சுற்றுலாப் பயணிகள் வர அதன் நிர்வாகம் தடை விதித்தது. இதுதெரியாமல் காணும் பொங்கல் விழாவான இன்று சுற்றுலாப் பயணிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பூங்கா முன்பு குவிந்தனர்.

பவானிசாகர் பூங்கா முன்பு குவிந்த சுற்றுலாப் பயணிகள்

பின்னர் பூங்கா நுழைவு வாயில் மூடப்பட்டிருந்ததால் பவானி ஆற்றுப் பாலத்தின் மீது நின்று புகைப்படம் எடுத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: பொள்ளாச்சியில் காவலர்கள் கொண்டாடிய சமத்துவ பொங்கல்!

ABOUT THE AUTHOR

...view details