தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீண்டும் செயல்படத் தொடங்கிய பவானிசாகர் துணைமின் நிலையம் - bavnisagar forest

ஈரோடு: பவானிசாகர் அருகே அடர்ந்த வனப்பகுதியில் நான்கு ஆண்டுகள் செயல்படாமலிருந்த துணைமின் நிலையம் மீண்டும் நேற்றிலிருந்து (பிப். 22) செயல்படத் தொடங்கியது.

பவானிசாகர் துணை மின் நிலையம்
பவானிசாகர் துணை மின் நிலையம்

By

Published : Feb 23, 2021, 12:10 PM IST


கோபி மின் பகிர்மான வட்டம், சத்தியமங்கலம் துணைக் கோட்டத்திற்குள்பட்ட பவானிசாகர் - தெங்குமரஹாடா செல்லும் சாலையில் அடர்ந்த வனப்பகுதியில் 110 கிலோவாட் ஆற்றல் கொண்ட கெஜலெட்டி துணைமின் நிலையம் செயல்பட்டுவந்தது.

இந்தத் துணைமின் நிலையத்தின் மூலம் தெங்குமரஹாடா, கல்லாம்பாளையம், அல்லி மாயாறு, கெஜலெட்டி, நந்திபுரம் உள்ளிட்ட வன கிராமங்கள் பயன்பெற்றுவந்தன. உரிய பராமரிப்பு இல்லாததால் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்தத் துணைமின் நிலையம் செயல்படாமல் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

பவானிசாகர் துணைமின் நிலையம்

இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மீண்டும் இந்தத் துணைமின் நிலையத்தை பராமரிப்பு செய்ய நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கின. வனப்பகுதி என்பதால் வனவிலங்குகள் துணைமின் நிலையத்திற்கு வராமல் தடுக்க, சுற்றிலும் அகழி வெட்டப்பட்டு பாதுகாப்பு ஏற்படுத்தி புதிய மின்மாற்றி பொருத்தப்பட்டு புனரமைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து திங்கள்கிழமை (பிப். 22) கெஜலெட்டி துணைமின் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஈரோடு தலைமைப் பொறியாளர் ராஜேந்திரன், கோபி மேற்பார்வைப் பொறியாளர் நேரு ஆகியோர் புதிய மின்மாற்றியை இயக்கிவைத்து, புனரமைக்கப்பட்ட துணைமின் நிலையத்தின் செயல்பாட்டைத் தொடங்கிவைத்தனர்.

இதையும் படிங்க:துணை மின்நிலைய வளாகத்தை சீரமைக்க கோரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details