தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சவரத் தொழிலாளர்கள் ஈரோடு ஆட்சியரிடம் மனு! - மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன்

ஈரோடு: தமிழ்நாடு சவரத் தொழிலாளர்கள் சங்கத்தினர், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாகக் கூறி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

சவரத் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு!
சவரத் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு!

By

Published : May 11, 2020, 4:01 PM IST

கரோனா வைரஸ் நோய்ப்பாதிப்பின் காரணமாக, நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினால், அனைத்துக் கடைகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. தற்போது சில கடைகளுக்கு மட்டும் விலக்களிக்கப்பட்டு திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு சவரத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவனிடம் கோரிக்கை அடங்கிய மனுக்கள் வழங்கப்பட்டன.

அந்த மனுவில்; 'ஈரோடு மாவட்டத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக நீடித்திருந்த கரோனா நோய்ப்பாதிப்பை முற்றிலும் குணப்படுத்தி, நோயில்லாத மாவட்டமாக பச்சை நிற மண்டலமாக உருவாக்கக் காரணமான, அனைத்து அரசுத் துறை அலுவலர்கள், ஊழியர்கள், துப்புரவுப்பணியாளர்களுக்கு நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் வாடிக்கையாளர்களைத் தூய்மைப்படுத்தி, தினசரி வருவாயை ஈட்டிடும் வகையில் அமைந்துள்ள தங்களது தொழில் கூடங்கள் மூடப்பட்டு 50 நாட்கள் கடந்துள்ளதால், மாவட்டம் முழுவதும் தினசரி வருவாயை நம்பியுள்ள 3000க்கும் மேற்பட்ட சவரத்தொழிலாளர்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களை நம்பியுள்ள வாடிக்கையாளர்களும் தங்களது முகத்தை சுத்தம் செய்து கொள்ள முடியாமலும், முடிகளைக் குறைத்துக் கொள்ள முடியாமலும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.

அதேசமயம், தங்களது தொழிலுக்காக பிரதான சாலை, முக்கியப் பகுதிகளில் கடைகளைப் பிடித்துள்ளவர்கள் மாத வாடகையையும், உதவியாளர்களுக்கான ஊதியத்தையும் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், ஏனைய அனைத்துத் தொழிலாளர்களுக்கும் வழங்கப்படுவதைப்போல், தங்களுக்கும் நிவாரண உதவிகளை வழங்கிட வேண்டும். கடைகள் மூடப்பட்டது முதல் ஊரடங்கு உத்தரவு முடிந்து தங்களது கடைகள் திறக்கப்படும் வரை கடை வாடகை, உதவியாளர்களுக்கான ஊதியம் ஆகியவற்றை தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொண்டு வழங்கிட வேண்டும்.

கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டதற்குப்பிறகு கடைகளைச் சுத்தம் செய்திடவும், அழகு படுத்திடவும் வங்கிகள் நிபந்தனையற்ற கடன்களை வழங்குவதற்கு உத்தரவு இட வேண்டும். மேலும் கடைகளுக்குப் பெற்றுள்ள கடன் தொகையை திருப்பிச் செலுத்துவதற்கு உரிய கால அவகாசத்தை வங்கிகள் வழங்குவதற்கு அனுமதி பெற்றுத் தர வேண்டும்' இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: அவசரக் கடன் வழங்கப்படவில்லை - எஸ்பிஐ

ABOUT THE AUTHOR

...view details