தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போலி ஆவணங்கள் மூலம் வங்கிக் கடன் மோசடி: தம்பதிக்கு வலைவீச்சு! - போலி ஆவணங்கள்

ஈரோடு: போலி ஆவணங்கள் மூலம் பல லட்சம் ரூபாய் வங்கி கடன் மோசடி செய்து தலைமறைவாகியுள்ள தம்பதியினரிடமிருந்து கடன் தொகையை பெற்றுத் தர வேண்டுமென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகங்கள் புகார் தெரிவித்துள்ளன.

போலி ஆவணங்கள் மூலம் வங்கி கடன் மோசடி... தம்பதிக்கு வலைவீச்சு!
போலி ஆவணங்கள் மூலம் வங்கி கடன் மோசடி... தம்பதிக்கு வலைவீச்சு!

By

Published : Nov 18, 2020, 8:06 PM IST

ஈரோட்டைச் சேர்ந்த கார்த்திக், ராதிகா தம்பதியினர் பல கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலையை நடத்துவதாகவும், தங்களுக்கு கார் வாங்க, தனி நபர் கடன் வேண்டுமென்றும் ஈரோட்டிலுள்ள பொதுத்துறை வங்கிகளான கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி உள்ளிட்ட மூன்று வங்கிகளை நாடியுள்ளனர்.

வங்கி நிர்வாகங்கள் அந்தத் தம்பதியினரிடமிருந்து பெற்ற விண்ணப்பம் உள்ளிட்ட ஆவணங்களின் அடிப்படையில் ஒரு வங்கி 19 லட்சம் மதிப்பிலான காருக்கான கடன் தொகையையும், மற்றொரு வங்கி 15 லட்சம் மதிப்பிலான காருக்கான கடன் தொகையையும், இதர வங்கியொன்று பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தனிநபர் கடனையும் வழங்கியது.

இதனிடையே கார்களையும் தனிநபருக்கான கடன் தொகையையும் பெற்ற தம்பதியினர் வங்கிக்குச் செலுத்த வேண்டிய தவணைத் தொகை மற்றும் வட்டிகளை கட்ட மிகவும் காலதாமதம் செய்ததால் வங்கி நிர்வாகத்தினர் அவர்கள் கொடுத்த முகவரிக்குச் சென்று பார்த்தபோது அது போலியான முகவரியென்பதும், அவர்கள் கார் கடன் மற்றும் தனிநபர் கடன்களுக்காக வழங்கிய அனைத்து ஆவணங்களும் போலியானது என்பதும் தெரியவந்தது.

இதனால் கடும் அதிர்ச்சியடைந்த வங்கி நிர்வாகத்தினர் போலி முகவரி, போலி ஆவணங்கள் மூலம் கடன்களைப் பெற்று வங்கிகளையே ஏமாற்றி தலைமறைவாகியுள்ளவர்கள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரையிடம் புகார் மனு வழங்கியுள்ளனர்.

மனுவில் வங்கி நிர்வாகத்திடன் போலி ஆவணங்கள் கொடுத்து கார்களையும், தனி நபர் கடன் தொகையையும் பெற்றுக் கொண்டு மோசடி செய்துள்ள தம்பதியினரைக் கண்டுபிடித்து அவர்களிடமிருந்து வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய தொகையை பெற்றுத் தர வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details