தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வுப் பேரணி - Awareness rally in Erode

ஈரோட்டில் உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

விழிப்புணர்வு பேரணியை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் கொடி அசைத்துத் துவக்கி வைக்கும் காட்சி
விழிப்புணர்வு பேரணியை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் கொடி அசைத்துத் துவக்கி வைக்கும் காட்சி

By

Published : Mar 12, 2020, 2:37 PM IST

உலக சிறுநீரக பாதுகாப்பு தினம் ஆண்டுதோறும் மார்ச் மாதம் 12ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. அதன்படி, இன்று சிறுநீரகத்தைப் பாதுகாப்பது குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தபட்டுவருகின்றன.

இந்நிலையில் ஈரோட்டில் தனியார் மருத்துவமனையின் சார்பில் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வுப் பேரணியை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.

உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

அரசு மருத்துவமனையிலிருந்து தொடங்கிய இப்பேரணி, பெருந்துறை சாலை வரை சென்று முடிவடைந்தது. மேலும், சிறுநீரகத்தின் செயல்பாடுகள் குறித்தும், மக்களிடையே உள்ள டயலாஸிஸ் அச்சம் குறித்தும் இப்பேரணியில் வலியுறுத்தப்பட்டது.

இதையும் படிங்க:'தமிழில் படித்தவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு: அனைத்து துறைகளிலும் கொண்டுவர முயற்சி'

ABOUT THE AUTHOR

...view details