ஈரோடு அருகேயுள்ள சோலார் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் விற்பனை நிலையத்தை தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "தமிழ்நாடு அரசு அனைத்துத் துறைகளிலும் சிறப்பான முறையில் ஆட்சி புரிந்துவருகிறது. 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மட்டுமல்ல, பழனிசாமி இருக்கும்வரை அவர்தான் மாநிலத்தின் முதலமைச்சராக இருப்பார்.