ஈரோடு: அரச்சலூரில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பத்துக்கு மேற்பட்ட இடத்தில் பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நொய்யல் ஆற்றில் கரைக்க இந்து முன்னணியினர் முடிவு செய்தனர்.
இதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தது. இதனைத் தொடர்ந்து அங்கு வந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைக்கு பூஜை செய்த பின்பு ஊர்வலமாக விநாயகர் சிலையை எடுத்துச் செல்ல முயன்றார்.
இதற்கு காவல் துறையினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அக்கட்சியினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அதன் காரணமாக இந்து முன்னணியினர் விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்று வாய்க்காலில் கரைத்தனர். இதனைத் தொடர்ந்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது, “அமைச்சர் மனோ தங்கராஜ் அவருடைய கட்சி தலைவர் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தனிப்பட்ட முறையில் வாழ்த்து சொல்ல வேண்டியது இல்லை என்று கூறியுள்ளார். முதலமைச்சர் எல்லோருக்கும் பொதுவானவர் ரம்ஜான், கிறிஸ்துமஸ் பண்டிகைகளுக்கு மட்டுமே வாழ்த்து கூறுவது ஓட்டு வங்கி அரசியல் இது ஏற்புடையது இல்லை.
அமைச்சர் பொன்முடி மத்திய அரசு தான் போதை பொருள் பரவலுக்கு காரணம் என்று கூறுவது தவறு, மாநில அரசு தான் போதை பொருளை தடுக்க வேண்டும், மத்திய அரசு மீது பழி போடுவது கண்டனத்துக்குரியது. டாஸ்மாக் அரசியல் தான் நடந்து கொண்டு இருக்கிறது. சாராய ஆலையை நடத்துவது திமுக அரசு தான் தேர்தலில் வெற்றி பெற்றால் தங்களுக்கு சொந்தமான ஆலையை மூடுவோம் என கனிமொழி கூறினார்.
அருனா ஜெகதீசன் ஆணையம் ஸ்டெர்லைட் கலவரம் தொடர்பாக காவல்துறைக்கு எதிரான அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திய காவல் துறையினர், உத்தரவிட்ட உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அருனா ஜெகதீசன் ஆணையம் ஒருதலை பட்சமாக அறிக்கையில் கூறியுள்ளது.
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் காவல் துறைக்கே பாதுகாப்பு இல்லை, கனியாமூர் பள்ளி கலவரத்தை காவல் துறையினர் தடுத்தால் எதற்காக தடியடி நடத்தினார்கள் என அரசியல் கட்சிகள் பலி போடும். அருனா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை காவல் துறையினர் தனது கடைமை செய்தால் அரசு காவல் துறைக்கு ஒத்துழைப்பு வழங்காது என்பதற்கு முன் உதாரணம்.
கனியாமூர் கலவரம் தொடர்பாக பல்வேறு தவறான கருத்துக்களை பரப்பி வரும் யூடியூப்பர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் நீதிமன்றமே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். மேலும், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இணைவவோம் இந்தியா என்ற பெயரில் நடைப்பயணம் வருவதாகவும் இந்தியாவை பிரித்ததே காங்கிரஸ் கட்சி தான் என்றும் தமிழகம் வரும் ராகுலுக்கு கோ கோ ராகுல் என்று கருப்பு கொடி காட்டப்படும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:விநாயகரை வழிபட்ட பாஜக பிரமுகர் ரூபி கானுக்கு நோட்டீஸ்