தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கேட்தற்கு 10 மணல் குவாரி பரிசு" - தமிழக அரசு மீது பாய்ந்த அன்புமணி ராமதாஸ்! - PMK latest news

Anbumani Ramadoss: கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைகள் அமைக்குமாறு பாமக வலியுறுத்திய நிலையில், 10 மணல் குவாரிகளுக்கு அரசு அனுமதியளித்துள்ளதாக குற்றம்சாட்டிய அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், ஒரே நாடு, ஒரே தேர்தல் விவகாரத்தில் அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும் என்றும் விரைவில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 4, 2023, 7:24 PM IST

அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பு

ஈரோடு: ஈரோடு திண்டலில் தமிழக அளவில் இறகுப்பந்து போட்டியின் இறுதி போட்டியை தமிழக இறகுப்பந்து கழக தலைவரும், பா.ம.க தலைவருமான அன்புமணி ராமதாஸ் இன்று (செப்.4) தொடங்கி வைத்தார். பின்னர் செய்தாளர்களிடம் பேசிய அவர், 'காவிரியில் கடந்த ஆண்டு 620 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலந்ததாகவும், நீருக்காக கர்நாடகா, ஆந்திரா, கேரளாவுடன் போராடி வருவதாகவும், இனிவரும் காலங்களில் காவிரியில் தண்ணீருக்காக கர்நாடகவுடன் சண்டை போட வேண்டிய சூழ்நிலை இருப்பதாகவும் தெரிவித்தார்.

காவிரி - தாமிரபரணி ஆறுகளை இணைக்க வேண்டும் என்பது அவசியமான திட்டம் என்றும், இன்றைய சூழ்நிலையில் நீர் மேலாண்மைக்கு மிக மிக முக்கியமான திட்டம் என்றும் கூறினார். கர்நாடகா காவிரியில் தண்ணீர் தர மறுப்பது, மேகதாது அணை கட்டுவது என கூறுவது கண்டித்தக்கது என்ற அவர், காவிரி படுக்கையிலுள்ள அணைகள் அனைத்தும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொண்டார். நொய்யல் ஆறு அல்ல என்றும் அது ஒரு சாக்கடை், அதை மீட்டெக்க வேண்டும்' என்றும் கூறினார்.

கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைக்கு பதிலாக, 10 மணல் குவாரிகளுக்கு அனுதி: தொடர்ந்து பேசிய அன்புமணி ராமதாஸ், 'நூல்விலை உயர்வால் கொங்கு பகுதியில் 70% விசைத்தறிகள் மூடப்பட்டுள்ளதாகவும், நூல் விலையை குறைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார். கொள்ளிடம் ஆற்றில் பா.ம.க சார்பில் 10 தடுப்பணை கேட்டால், அரசு 10 மணல் குவாரிகளை திறப்பதாக குற்றம்சாட்டினார். மேலும், NLC தமிழகத்தின் பிரச்னை என்ற அன்புமணி ராமதாஸ் NLC இதுவரை 37 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களை அழித்துள்ளதாகவும் ஆகவே, திமுகவை விவசாயகளின் எதிரியாகவே பார்ப்பதாக' தெரிவித்தார்.

'தஞ்சை டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடி கருகி கொண்டு இருப்பதாகவும், உச்ச நீதிமன்றம் நல்ல தீர்ப்பு கொடுத்தால் தான் குறுவை காப்பாற்ற முடியும் என்றார். 1952, 1957, 1962, 1967 ஆகிய ஆண்டுகளில் நாடுமுழுவதும் ஒரே தேர்தல் நடைபெற்றதாகவும், ஒரே தேர்தலில் உள்ள சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும் என்றும் அதேநேரம் மின்னணு வாக்குப்பதிவு இயந்நிரங்கள் பற்றாக்குறையாக இருப்பதாகவும் கூறினார். மேலும் பேசிய அவர், ஒரே நாடு, ஒரே தேர்தல் விவகாரத்தில் முன்னாள் குடியரசுத்தலைவரின் தலைமையிலான குழுவின் அறிக்கையை அடுத்து பா.ம.க தனது நிலைப்பாட்டை அறிவிப்போம்' என்றார்.

கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பு:'பா.ம.க. கடந்த 6 மாதமாக தேர்தல் பணிகளை செய்து வருவருதாகவும், கூட்டணி குறித்து விரைவில் எங்களது முடிவை அறிவிப்போம் என்று கூறிய அவர், தமிழகத்தில் 2026-ல் கண்டிப்பாக கூட்டணி ஆட்சிதான் எனத் தெரிவித்தார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நீட் தேர்வில் தனிப்பட்ட கருத்தை திணிக்கக்கூடாது என்றும் அவர் நீதிபதி போன்று நடுநிலைமையானவர் என்றும் சட்டசபையில் சட்ட மசோதா நிறைவேற்றினால் ஆளுநர் மசோதாவில் கையெழுத்திட வேண்டும்' என்றார்.

இலக்கை நோக்கி மதுவிற்பனை செய்வதே 'திராவிட மாடல்':போதை பொருள் விற்பவர்கள் மீது கட்சி பேதமின்றி குண்டாஸ் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். 'மதுவிலக்கு துறை அமைச்சர்' அல்ல என்றும் 'மது விற்பனைத்துறை அமைச்சர்' என்றும் கூறிய அன்புமணி ராமதாஸ், இந்தாண்டு மது விற்பனை மூலம் ரூ.45 ஆயிரம் கோடி இலக்கு என்றும் கூறினார். இதில், அடுத்த ஆண்டு ரூ.55 ஆயிரம் கோடி இலக்கு நிர்ணயிப்பதாகவும், மற்ற துறைகளில் இலக்கு நிர்ணயிக்காத தமிழக அரசு மது விற்பனையில் மட்டுமே இலக்கு நிர்ணியப்பதுதான் 'திராவிட மாடல்' என்றார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து என வாக்குறுதி கொடுத்துவிட்டு, தற்போது போராட்டத்தை நடத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

இதையும் படிங்க:நெல்லை பாஜக பிரமுகர் கொலை வழக்கில் திமுக நிர்வாகி சரண்டர்; அரசியல் நெருக்கடி காரணமா?-அண்ணாமலை பேட்டி!

ABOUT THE AUTHOR

...view details