கரோனா பொது முடக்கத்தை பயன்படுத்தி இயற்கை வளங்களை சூறையாடும் மத்திய, மாநில அரசுகளின் மக்கள், தொழிலாளர்கள் விரோத கொள்கையை கண்டித்து வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கிய நாளில் "இந்தியாவை பாதுகாப்போம்" என்ற கோஷங்களை முன்னெடுத்து நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்கங்கள் ஈடுபட்டுள்ளன.
அனைத்து தொழிலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் - Curfew order
ஈரோடு: மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கையை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் எதிரில் அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் எல்பிஎஃப் தொழிற்சங்க நிர்வாகி பாலமுருகன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பொது முடக்க காலத்தில் வருவாய் ஈட்டாத அனைத்து குடும்பங்களுக்கும் ஆறு மாத காலத்திற்கு ரூ. 7500 நிவாரணம் வழங்கவேண்டும், தொழிலாளர் சட்டங்களை நீக்கவேண்டும்,
வேலை நேரம் 12 மணியாக அதிகரிப்பதை கைவிடவேண்டும், இயற்கை வளங்களை அந்நியர்கள் கொள்ளையடிக்காமல் பாதுகாக்கவேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.