ஈரோடு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற ஊராட்சி மன்றத் தலைவர்கள், துணைத் தலைவர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம், ஈரோடு அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்றது.
இம்முகாமினை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் ஆகியோர் தலைமையேற்று தொடங்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 'தந்தை பெரியார் வழியில் அடித்தட்டு மக்களுக்காக அதிமுக தொடர்ந்து பயணிக்கும். உள்ளாட்சித் தேர்தல், பொங்கல் விடுமுறையால் நீட் பயிற்சி மையங்கள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் அதற்கான பயிற்சி தொடங்கப்படும்' எனவும் தெரிவித்தார்.
'தந்தை பெரியார் வழியில் அடித்தட்டு மக்களுக்காக அதிமுக தொடர்ந்து பயணிக்கும்' தொடர்ந்து பேசிய அவர், 'பொதுத் தேர்வுகளுக்கான வினாத்தாள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அரசின் திட்டங்களை மனிதநேயத்துடன் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்' எனவும் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க:'ரஜினி வருத்தம் தெரிவிக்க வேண்டும்' - சீண்டிய அமைச்சர் ஜெயக்குமார்