தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈரோட்டில் அதிமுக உறுப்பினர் கொலை! - erode latest news

ஈரோடு கருங்கல்பாளையத்தில் அதிமுக உறுப்பினரை அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

AIADMK member hacked to death in Erode
AIADMK member hacked to death in Erode

By

Published : Aug 3, 2021, 8:48 AM IST

ஈரோடு : கருங்கல்பாளையம் வி.ஜி.பி. நகரை சேர்ந்தவர் மதி (எ) மதிவாணன் (45). பைனான்ஸ் தொழில் செய்துவந்தார். இவர் தீபா பேரவை மாவட்ட இணை செயலாளராக இருந்து கடந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக அதிமுகவில் இணைந்ததாக கூறப்படுகிறது. கிருஷ்ணம்பாளையம் ராமமூர்த்தி நகரில் அம்மா பொது இ-சேவை மையமும் நடத்தி வந்தார்.

இந்நிலையில், இவர் நேற்று இரவு இ-சேவை மையத்தில் வாசலில் நாற்காலியில் அமர்ந்திருந்தார். அப்போது மூன்று அடையாளம் தெரியாத நபர்கள் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் மதிவாணனை சரமாரியாக வெட்டினர். இதில் கை, தலை, உடம்பில் பயங்கர வெட்டு காயங்கள் விழுந்தன. இதில் ரத்த வெள்ளத்தில் மதிவாணன் துடிதுடித்து நாற்காலியிலேயே இறந்தார்.

தகவலறிந்து ஈரோடு டவுன் காவல் துணை கண்காணிப்பாளர் ராஜூ சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார். பின்னர், ஈரோடு கருங்கல்பாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசராணை நடத்தியதில் முதல்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.

இதையடுத்து, உடல் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது. காவல் துறையினர் மேலும், இதுகுறித்து நான்கு காவல் ஆய்வாளர்கள் அடங்கிய தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் நடந்த இந்த கொடூர சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சிறுமியை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 4 பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details