தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈரோடு கிழக்கு: தென்னரசுக்கு ஆதரவாக களமிறங்கிய அதிமுக மாஜி அமைச்சர்

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார்.

ஈரோடு கிழக்கு: தென்னரசுக்கு ஆதரவாக களமிறங்கிய அதிமுக மாஜி அமைச்சர்
தீவிர வாக்கு சேகரிப்பு: தென்னரசுக்கு ஆதரவாக களமிறங்கிய அதிமுக மாஜி அமைச்சர்

By

Published : Feb 12, 2023, 8:31 PM IST

Updated : Feb 12, 2023, 9:16 PM IST

ஈரோடு கிழக்கு: தென்னரசுக்கு ஆதரவாக களமிறங்கிய அதிமுக மாஜி அமைச்சர்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பிபி அக்ரஹாரம் ஜோசப் தோட்டம், அன்னை சத்யா நகர் உள்ளிட்ட பகுதிகளில் முன்னாள் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் மற்றும் கூட்டணி கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் பின்னர், செய்திகளியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன், 'மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து கொண்டு இருப்பதால் மாற்றத்தை விரும்புகிறார்கள். சாயத் தோல் கழிவுநீர் பிரச்சனையை தீர்க்க, அதனை அதிமுக அரசு ரூ.700 கோடி மதிப்பீட்டில் கடலில் கலக்க செய்யும் திட்டத்தை திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது. அதற்கு ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் தென்னரசு ரூ.700 கோடிக்கு விடைகண்டு, மீண்டும் இத்திட்டத்தை கொண்டு வருவேன் என மக்களுக்கு வாக்கு அளித்துள்ளார்' என மாஃபா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

'இன்னும் 13 நாட்கள் ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரசாரம் முழுவீச்சுடன் நடைபெறும்,
ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், பிரசாரத்திற்கே இளங்கோவன் முழுமையாக வருவதில்லை' எனக் மாஃபா.பாண்டியராஜன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதையும் படிங்க:"கட்சிகள் சமூக நீதி பேசும் சூழலில்தான், குடிநீரில் மலம் கலக்கும் சம்பவம் நடக்கிறது" - ஆளுநர் ரவி!

Last Updated : Feb 12, 2023, 9:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details