ஈரோடு:வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடையவுள்ளதால் தேர்தலில் போட்டியிட விரும்பும் பலரும் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். கரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், வேட்புமனு தாக்கல் செய்யும்போது, வேட்பாளருடன் இருவர் மட்டுமே வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தனி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஏ பண்ணாரி, வேட்புமனு தாக்கல் செய்வதற்காக ரங்க சமுத்திரத்திலிருந்து புறப்பட்டார். அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக சரக்கு வானத்தின் மூலம் பல்வேறு பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்களும் அங்கு சென்றுள்ளனர்.