ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் அக்கட்சியின் மூத்த தலைவர் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்றது. இதில் தாளவாடி, சத்தியமங்கலம், கடம்பூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த அதிமுக தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்: குடித்துவிட்டு கும்மாளம் அடித்த தொண்டர்கள் - erode district news
ஈரோடு: அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் குடித்துவிட்டு கும்மாளம் அடித்த தொண்டர்களுக்கு அமைச்சர் செங்கோட்டைன் அறிவுரை வழங்கினார்.
அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்
கூட்டத்தில் சில அதிமுக தொண்டர்கள் மதுபோதையில் ஆடியதை பார்த்த அமைச்சர் செங்கோட்டையன், "முதலமைச்சர் அறிவித்த பொங்கல் பரிசு ரூ.2500 ஐ நீங்கள் வாங்க போக வேண்டாம், வீட்டில் உள்ள பெண்கள் போய் வாங்கட்டும். அவர்கள் ஒரு மாதத்திற்கு செல்வுக்கு வைத்துகொள்வார்கள்.நீங்கள் வாங்கினால் பணம் வீடுபோய் சேராது டாஸ்மாக் கடைக்கு போகும்" என்றார்.
இதையும் படிங்க: திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடப்பதில் ஏன் தாமதம்?